Saturday, November 28, 2009

ஸ்கூல் - Part I

முதல் நாள்!! ஸ்கூலுக்கு போறதுக்கு அப்பா, அம்மா, அப்போ தாத்தா, பாட்டி என்னை ஜோரா ready பண்ணி எங்க ஆத்து வெராண்டாவுல உக்காரவேச்சிட்டு என் அண்ணனையும் காவலுக்கு வெச்சிட்டு ஏதோ சின்ன வேலையா உள்ள போனாங்க... லைட்டா என் அண்ணனப்பத்தேன் அவன் ரொம்ப மும்மரமா ஷூ லேச சரி செஞ்சிண்டு  இருந்தான் - சட்டுன்னு ஒரு jump - சவுண்டே இல்லாம என் காட்டுக்கு அடீல போய் உக்காந்துன்னுட்டேன் -

என்ன நினைச்சு அப்புடி பண்ணிருப்பேன்?? அததென்ன காட்டுக்கடீல Harry Potter ல வர்ற invisible உலகமா இருக்கு? என்னமோ அங்க போய் ஒளிஞ்சுன்னுட்டா நம்பள யாரும் கண்டுபிடிக்க முடியாது அப்புறம் நம்பள யாரும் ஸ்கூலுக்கு கூட்டிட்டு போகமாட்டங்கன்னு ஒரு சின்ன கணக்குத்தான்ன்னு வெச்சிக்கொங்கோளேன்! 

எல்லாரும் கிளம்பி வெளீல வந்து ஆத்த பூட்டிட்டு பொறப்பட ரெடியா இருந்தா - என்னை காணோம்!

As usual என் அண்ணாகிட்டே கேட்டாங்க.......... அவன் எங்கடா நம்பள மாட்டிவிட்டிடுவாநோன்ன்னு நினைச்சேன், பட் அழற சத்தம் கேட்டுது.... I was confused!!

ஏதோ சரியா படலை, சரி என்னன்னு வெயிட் பண்ணி தான் பாப்போம்ன்னு பாத்தா பய்யன் அப்பாகிட்டே, sorry ப்பா நான் அவள தொலச்சிட்டேன்னு அழுதுண்டுருக்கான்! எனக்கு பாவோமா போச்சு நானும் அழுதுண்டே வெளில வந்தேன்... But, இப்போ நினைச்சுப்பாத்தா அவன் என்ன ஒரு பென்சில், பேனா, ரப்பர் மாதிரீன்னா treat பண்ணிருக்கான்....அவன்யாரு என்ன தொலைக்க???

அன்னிக்குப்பண்ணின ஆர்ப்பாட்டம் இன்னிக்கும் மறக்கமுடியல.... ஸ்கூல்ல ஒரு குண்டு பாட்டி என்னை பிடிச்சு தரதரன்னு இழுத்துண்டு போனா... கண்ணீரும் கம்பலையுமுமா கிளாசுக்குப்போனேன்! அன்னைக்கு ஆரம்பிச்சாது தான் இந்த மாரத்தான் படிப்பு - எப்போடா முடியும்ன்னு ஆயிடிச்சுங்க... by the way - அன்னைக்கு நடந்த சம்பவத்துக்கு பிறகு தான் என் அண்ணாவுக்கு ஒரு பேர் தேட ஆரம்பிச்சேன் - கடசீல நம்ப வடிவேல் சார் தான் கரெக்டான பேருக்கு ஐடியா குடுத்தது...."டுபுக்கு"!

First - Prayer!

பெரிய்ய சுர்ச்க்குள்ள எல்லாரையும் நிறுத்தி prayer பண்ண வெச்சாங்க... யாரு பாடறதுன்னு நினைக்கறீங்க....... டவுட்ஏ வேண்டாம் ..........என் அண்ணன் தான்!
உலக சோகமெல்லாம் சுமந்து நிற்கும் குழந்தைகளைப்பாத்தேன் - மனசுக்குள்ள நினச்சிண்டேன், உங்களுக்கெல்லாம் தெரியுமோ இல்லையோ, இனிமே நமக்கு ட்டின்னு தாண்டான்னு!!!

அப்பாவும், அம்மாவும் என் அண்ணன்கிட்டே பேசறத கேட்டிருக்கேன்...
ரொம்ப கஷ்ட்டம் டா..... :-(

அது என்னை "வெங்காயம்" ன்னு தலைப்பு?

அது என்னன்னா....

வெங்காயம் நம் வாழ்க்கையின் பிரதிபலிப்பு...எப்புடின்னு கேக்கறீங்களா? let me explain!

நம்ம எல்லாருமே வெங்காயம் போல தான்!

வெங்காயத்தை எடுத்து, டக்குன்னு உரிச்சு, துண்டு துண்டா நறுக்கி, வாணலில போட்டு வதக்கி, எத சென்ஜாலுமே அது அந்த சமையலுக்கு மெருகூட்டும்.... வெங்காயம் இல்லாத சமையல் ஒரு சமையலா?யோசிச்சுப்பாருங்க? அதே சமயம் வெங்காயத்தை சும்மா உருச்சு பாத்தா அதே வெங்காயம் ரூமையே நாறடிச்சு, மனுஷன அழ வெச்சிராது?

அதுமாதிரி, நம்பள யார் வேண்ணாலும் அவங்களோட வாழ்க்கைல சுவரச்ச்யத்துக்கு சேத்துண்டா நாம அவங்களோட வாழ்க்கைய மெருகூட்டுவோம், அதே நம்பள சும்மா நோண்டி பாத்தா அவங்கள அழ வெக்காம விடுவோமா?

That's why, the லாகிக்ஸ்!

எப்புடி? சும்மா கலக்கிட்டோம்ல? நல்லகாலம் பெரியார் மட்டும் உயிரோட இருந்திருந்தா என்னை கொன்னே போட்ருப்பரு!

என்னடா இந்த பொண்ணு நைட்ல தூங்காம வெங்காயம் லாகிக்ஸ் பேசுதேன்னு பாக்கறீங்களா? என்னப்பண்றது, நமக்கு இப்போ தான் கொஞ்சம் டைம் கிடைச்சிருக்கு....ரொம்பநாளைக்கு அப்புறம் ஏன் டுபுக்கு அண்ணனோட பேசினேன்! சரி.... தூங்கறதுக்கு முன்னாடி நம்ப கிட்ட சிலபல மக்கள் கேட்டிட்டிருந்த கேள்விக்கு ஒரு பதில போட்டுட்டு தூங்கலாமேன்னு நினைச்சேன்!

குட் நைட் :-) நாளைக்கு என்னோட, சின்ன சின்ன கதைகள சொல்றேன் சரியா?? டாட்டா ...

Thursday, November 26, 2009

கண் விழித்துப்பார்த்தபோது....

செப்டம்பர் மாதம், கண்ணைக்கூசும் வெளிச்சம் சட் என கண்ணை மூடிக்கொண்டேன்....என்னைச்சுற்றி ஒரே ஆரவாரம்! என்னை தொட்டு தொட்டு ஏதோ செய்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது - but I just cannot understand! ஒன்றும் புரியவில்லை!

சரி இந்த குழப்பத்திற்கு முடிவுகட்டவேண்டும் என்று மீண்டும் கண்களை திறந்து பார்த்தேன், மீண்டும் ஒரே ஆரவாரம்! அடடா, என்ன உலகமடா சாமி! என்னை எங்கே கொண்டு வந்துவிட்டாய் என்று என் கடவுளிடம் கேட்டேன்! அவளும், அவனும் என்னைப்பார்த்து சிறிதாய் புன்னகித்து, wish செய்தனர்! That's all - they left! அன்று பார்த்ததுதான்!

என் அம்மாவை மட்டும் என்னால் அடையாளம் காண முடிகிறது, but who are others?
எதுவும் புரியாமல் என் அம்மாவை நோக்கி புன்னகித்தேன்! ஏனோ என்னால் பேசமுடியவில்லை. இருந்தாலும் நம்ப சிங்க குட்டி இல்லையா? என் அம்மாவிடம் சொன்னேன் - "I just want to sleep mom! இவங்கள போகச்சொல்லேன், உனக்கு நான் தொந்தரவு கொடுக்காமல் எவ்ளோ easy a...." சொல்லிமுடிப்பதற்குள் தூக்கம் என்னை கவர்ந்துவிட்டது!

அவள் புரிந்துகொண்டால் போலும், கொஞ்ச நேரத்துல எல்லா சத்தமும் ஓய - நிம்மதியா தூங்கினேன்! எவ்ளோ நாள் தூங்கிநேண்ன்னு மட்டும் கேக்காதீங்க, I just slept like a hog!

விழித்து பார்த்தல் - அதே கூட்டம்! now, I was able to recognize another person! ஓ! அது தான் அப்பா! செம்ம smart! ஆனா அவரோட மீசை தான் ரொம்ப குதித்து! அவருக்கு நான் என்ன சொன்னாலும் புரிய மாட்டேன்றது, அவர் பாட்டுக்கு - "ஜ்ஜ்சுஜ்ஜ்சு, புச்சு, அச்சி, குச்சி, ஜ்ஜ்சுஜ்சு" ன்னு புலம்பிண்டு இருந்தார்! I was trying to talk to him, but he was not getting me at all!

சரி ...... why am I able to recognize this another person???? சற்று குழம்பி என் அம்மாவை நோக்கி "யாரு மா இவன்" ன்னு கேட்டேன் - she was a star!சட்டுன்னு புரிஞ்சுன்ட்டா! She introduced me to my brother, "இவன் தான் உன் அண்ணா, ஹாய் சொல்றான் பாரு" ன்னு அவனை கொஞ்சம் என் பக்கத்துல கொண்டு வந்தா! அவனை பாத்ததுமே புரிஞ்சுன்னுட்டேன், சரி இவன் தான் நம்மளை அப்பா அம்மா கிட்ட மாட்டிவிடற கேஸ், இவன் கிட்ட கொஞ்ச நாளைக்கு careful அ இருந்து கவனிக்கனும்ம்ன்னு! அவனுக்கு என்ன அறவே பிடிக்கலை போல, அப்பா - - - ன்னுட்டு அழுதுண்டே ஓடி போய்ட்டான்! ஏன்டா நான் அவ்ளோ அசிங்கமாவாடா இருக்கேன் ன்னு நினைச்சிண்டேன்! It's alright! - be careful with this fellow ன்னு எனக்கே நான் சொல்லிண்டு - மறுபடியும் தூங்கிட்டேன்!

என் அப்பா & அம்மாவின் கண்களில் எவ்ளோ கனவுகள், they don't know that children can see it!

[பின்ன குழந்தைகள் எப்புடி நீங்க நினைச்சதெல்லாம் செய்யிறாங்கன்னு நினைக்கிறீங்க??

ஆனா அம்மாவோட கனவு தான் .....bad! இப்போ தான் பொறந்திருக்கேன், அதுக்குள்ளே ரங்கநாதன் தெருவுல எனக்கு கல்யாண shopping பண்ண என்ன அழைசிண்டு போயிண்டிருக்கா! அம்மா, just give me some time please!

That was my first day here on earth! What a welcome! ஓவரால் .......என்ஜாய் பண்ணினேன்!

நோட்:  அஷ்வின் போன் பண்ணி இப்போ தான் வெச்சான், தூக்கமே வர்ல...I could not help recollecting my childhood! அவ்ளோ பேசினோம்!! கண்டிப்பா இப்போ போய் தூங்கப்போறேன்! 
Good night!

Wednesday, November 25, 2009

விடுமுறை!

Yes, இன்றைக்கு ஹாஸ்பிட்டல் போக வேண்டாம்!

ஹாஸ்பிட்டல் ? ம்ம்ம்.... Yes! நான் ஒரு முட்டாளுங்க!! நான் ஒரு முட்டாளுங்க!... பாடல் என் காதில் ரீங்காரித்துக்கொண்டிரிக்கின்றது! :-)

நான் சென்னையில் ஒரு ஆஸ்பத்திரியில் டாக்டர்! காது, மூக்கு, தொண்டை "நிபுணர்" - I love it!

அப்பப்போ நைட் டுட்டி இருக்கும்... தூக்கத்தூக்கமா வரும், but, த்தூக்கத்தை தொலைச்சிட்டு நிக்கிற பெஷன்ட்ட நினைச்சா தூக்கம் பறந்து போய்டும்!

எம்.எம்.சீ ல படிச்சேன்! சீக்கிரமா பாஸ் பண்ணிட்டு டாக்டர் ஆயிட்டேன்! ஆனா என் கூட வேலை பாக்கறவங்க, என் சீனியர்ஸ் கிட்ட "நிபுணர்" பத்தி கேட்டா ஜோ!! ன்னு சிரிப்பாங்க :-( they think I am still a kid! Sometimes என் சீனியர்ஸ் எனக்கு மட்டும் ரூல்ஸ் ரிலாக்ஸ் பண்ணிடுவாங்க....

அதுனால அவ்ளோவா டென்ஷன் கிடையாது...

எனக்குன்னு ஒரு சின்ன கும்பல் (gang) இருக்கு! என்ன பத்தியும் என் கும்பலை பத்தியும் சொல்றச்சே how can I miss அஷ்வின்???? எங்க கும்பலோட தலைவன் அஷ்வின்! என் அருமை நண்பன்! (really??)

டாக்டர் ஆகணும்ன்னு நினைச்சு என்னைக்கும் படிக்கலை - நல்ல மார்க் வாங்கணும், அவ்ளோ தான் என்னோட குறிக்கோள்! But, இந்த கிறுக்கன் அஷ்வின் தான் என்னை மெடிசின் படி மெடிசின் படின்னு வற்புறுத்தி படிக்க வெச்சான்!

சின்ன கிளாஸ் ல இருந்தே நானும் அஷ்வின்னும் பிரெண்ட்ஸ்.... ஒண்ணா ஸ்கூலுக்கு போனோம், ஒண்ணா competitions க்குபோனோம், ஒண்ணா சைக்கிள் வாங்கினோம், ஒண்ணா college க்குப்போனோம் - it was a fantastic childhood! - சரி அவனை பத்தி அப்புறம் சொல்றேன்!

எங்க கூட படிச்ச மத்த பிரெண்ட்ஸ் அப்பாக்களுக்கு  transfer ஆயிடும். அதுனால எப்போவுமே எங்க கும்பல்ல 5 பேரு தான் fixed, மத்தவங்க எல்லாம் 3 to 5 years மெம்பர்ன்னு வெச்சிக்கொங்கோளேன்!

டாய் - என்ன பத்தி எழுதலாம்ன்னு நினைச்சு start பண்ணா - எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ முடிக்கபோறேன் போல இருக்கு!! - Get out of my head! :-)

எனக்கு கர்நாடக சங்கீதம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்! அடுத்தது ஐஸ் கிரீம்! அடுத்தது அப்பா, அம்மா and அண்ணா! நிறைய விளையாடுவேன்... Sports! ன்னா I am crazy! ஸ்கூல், காலேஜ் ல பசங்களுக்கு நடுவுல நான் மட்டும் ஒரு oddity அ நிப்பேன்!

வேற என்னபத்தி சொல்றதுக்கு ஸ்பெஷலா எதுவும் இல்ல! அஷ்வின் கிட்ட மட்டும் கேக்காதீங்க - வாய திறந்தா மூடமாட்டன்! :-)

அட!! அஷ்வின் கால் பண்றான் - என்ன சந்தேகமோ பைய்யனுக்கு....

சரி அப்புறம் பேசலாம் டாட்டா -

Good night!

நான் யார்?


தமிழ்ல எழுதி எவ்ளோ நாள் ஆச்சு? குட்டி intro குடுத்துட்டு நான் வேலைக்கு கிளம்பணும்!

My dear அப்பா, செல்ல அம்மா, டுபுக்கு அண்ணா, என்னோட favourite of all பாட்டி - அப்பாவோட அம்மா! That's my family! பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னை! Basically சென்னை முரட்டுத்தனம் என் குடும்பத்தில் சகஜம்!

Super சண்டை போடுவோம் அப்புறம் கட்டி புடிச்சு கொஞ்சிப்போம்... எங்க வீட்டு சண்டை கொஞ்சம் different! சிதம்பரம் Economic reforms பத்தி சொன்னது சரியா இல்ல தப்பா? ஜார்ஜ் புஷ் and ஆப்கானிஸ்தான் பாலிசி - அம்மா சொல்ற மாதிரி பைசா ப்ரோயோஜனம் இல்லாத டாபிக்ஸ் - சாப்ட்ரச்சே தொட்டுக்க ஊர்கா வேண்டாம், இந்த topics போதும் - discussion கார சாரமா இருக்கும்... நான் தான் டாப் வாய்ஸ்! கொஞ்சம் சவுண்ட் அதிகமா விடுவேன்!

அப்பா இஸ் எ ஜெனரல் மேனேஜர், அம்மா housewife - அண்ணா ஒரு டுபுக்கு - இல்ல இல்ல பாவம், நல்ல பைய்யன், US ல MS முடிச்சிட்டு இப்போ வேலை பண்ணிண்டு இருக்கான்! எப்போ பாத்தாலும் ஆன்லைன் (Online) ல இருப்பான், கேட்டா "பிஸி" ன்னு ஓடி போய்டுவான் :-( எங்க நான் எதாவுது வாங்கிண்டுவான்னு  சொல்லிடுவேனோன்னு பயம்!!

எத பத்தி எழுதலாம்ன்னு யோசிச்சிண்டிருக்கும் போது என் குடும்பமே ஒரு கதம்பமா இருக்கும் போது வேற எந்த topic க்கும் வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்!

எல்லாரபத்தியும் சொன்ன நான் என் பெருமையை பாடலையேன்னு வருத்த படவேண்டாம் - நாளைக்கு சொல்றேன் :-)

புராணம் ஆரம்பிச்சிடுச்சிய்யா, ஆரம்பிச்சிடுச்சி! :-)

வணக்கம்!

வணக்கம்!

இந்த புதிய இணையதளதில் உங்களுடன் கலந்துரயடுவதை நான் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொன்டிருக்கின்றேன்!

என் புனை பெயர் சுஜாதா ஜூனியர் or குட்டி சுஜாதா! ஒரு inspiration ன்னு வேசிக்கொங்கோளேன்!

என் மானசீக குரு சுஜாதா அவர்கள் இறந்ததர்க்குப்பிறகு ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டேன்... எழுந்து பார்த்தல்,  உலகமே மாறிவிட்டது. சற்று முன் ஆழ்வார்பேட் சிக்னலில் நின்றுகொண்டிருக்கும் பொது, சட் என்று யாரோ நடு மண்டையில் குட்டியது போல ஒரு feeling!

ஆங்கிலத்தில் blogging செய்து கொண்டிருந்த நான், எனக்கு மிகவும் பிடித்த தமிழில் ஏன் blog செய்ய கூடாது என்ற கேள்வி தான் அந்த குட்டு.

முடிவு செய்து விட்டேன்! இதோ அடுத்த சூர்யோதயதிற்கு முன்பே  ஆரம்பித்து விடலாம் என்று முதல் படி எடுத்து வைத்திருக்கிறேன்! உங்களையும், என் குருவையும் நம்பி!

அம்மாவின் குரல் கேட்கின்றது - எனக்கு காபி போட்டு தூங்க வைக்க எழுந்துட்டாள் போலும்... சரி சரி அப்புறம் பேசலாம் -

ம்ம்ம்...

உலகமே எழுந்ததற்கு பிறகு தான் எனக்கு தூக்கம் - 


Bye Bye மீண்டும் சிந்திப்போம் - I mean சந்திப்போம்!

அன்புடன்,
குட்டி சுஜாதா.