அது என்னன்னா....
வெங்காயம் நம் வாழ்க்கையின் பிரதிபலிப்பு...எப்புடின்னு கேக்கறீங்களா? let me explain!
நம்ம எல்லாருமே வெங்காயம் போல தான்!
வெங்காயத்தை எடுத்து, டக்குன்னு உரிச்சு, துண்டு துண்டா நறுக்கி, வாணலில போட்டு வதக்கி, எத சென்ஜாலுமே அது அந்த சமையலுக்கு மெருகூட்டும்.... வெங்காயம் இல்லாத சமையல் ஒரு சமையலா?யோசிச்சுப்பாருங்க? அதே சமயம் வெங்காயத்தை சும்மா உருச்சு பாத்தா அதே வெங்காயம் ரூமையே நாறடிச்சு, மனுஷன அழ வெச்சிராது?
அதுமாதிரி, நம்பள யார் வேண்ணாலும் அவங்களோட வாழ்க்கைல சுவரச்ச்யத்துக்கு சேத்துண்டா நாம அவங்களோட வாழ்க்கைய மெருகூட்டுவோம், அதே நம்பள சும்மா நோண்டி பாத்தா அவங்கள அழ வெக்காம விடுவோமா?
That's why, the லாகிக்ஸ்!
எப்புடி? சும்மா கலக்கிட்டோம்ல? நல்லகாலம் பெரியார் மட்டும் உயிரோட இருந்திருந்தா என்னை கொன்னே போட்ருப்பரு!
என்னடா இந்த பொண்ணு நைட்ல தூங்காம வெங்காயம் லாகிக்ஸ் பேசுதேன்னு பாக்கறீங்களா? என்னப்பண்றது, நமக்கு இப்போ தான் கொஞ்சம் டைம் கிடைச்சிருக்கு....ரொம்பநாளைக்கு அப்புறம் ஏன் டுபுக்கு அண்ணனோட பேசினேன்! சரி.... தூங்கறதுக்கு முன்னாடி நம்ப கிட்ட சிலபல மக்கள் கேட்டிட்டிருந்த கேள்விக்கு ஒரு பதில போட்டுட்டு தூங்கலாமேன்னு நினைச்சேன்!
குட் நைட் :-) நாளைக்கு என்னோட, சின்ன சின்ன கதைகள சொல்றேன் சரியா?? டாட்டா ...
மழையே....நலமில்லை.....நாங்கள்...
9 years ago
No comments:
Post a Comment