Yes, இன்றைக்கு ஹாஸ்பிட்டல் போக வேண்டாம்!
ஹாஸ்பிட்டல் ? ம்ம்ம்.... Yes! நான் ஒரு முட்டாளுங்க!! நான் ஒரு முட்டாளுங்க!... பாடல் என் காதில் ரீங்காரித்துக்கொண்டிரிக்கின்றது! :-)
நான் சென்னையில் ஒரு ஆஸ்பத்திரியில் டாக்டர்! காது, மூக்கு, தொண்டை "நிபுணர்" - I love it!
அப்பப்போ நைட் டுட்டி இருக்கும்... தூக்கத்தூக்கமா வரும், but, த்தூக்கத்தை தொலைச்சிட்டு நிக்கிற பெஷன்ட்ட நினைச்சா தூக்கம் பறந்து போய்டும்!
எம்.எம்.சீ ல படிச்சேன்! சீக்கிரமா பாஸ் பண்ணிட்டு டாக்டர் ஆயிட்டேன்! ஆனா என் கூட வேலை பாக்கறவங்க, என் சீனியர்ஸ் கிட்ட "நிபுணர்" பத்தி கேட்டா ஜோ!! ன்னு சிரிப்பாங்க :-( they think I am still a kid! Sometimes என் சீனியர்ஸ் எனக்கு மட்டும் ரூல்ஸ் ரிலாக்ஸ் பண்ணிடுவாங்க....
அதுனால அவ்ளோவா டென்ஷன் கிடையாது...
எனக்குன்னு ஒரு சின்ன கும்பல் (gang) இருக்கு! என்ன பத்தியும் என் கும்பலை பத்தியும் சொல்றச்சே how can I miss அஷ்வின்???? எங்க கும்பலோட தலைவன் அஷ்வின்! என் அருமை நண்பன்! (really??)
டாக்டர் ஆகணும்ன்னு நினைச்சு என்னைக்கும் படிக்கலை - நல்ல மார்க் வாங்கணும், அவ்ளோ தான் என்னோட குறிக்கோள்! But, இந்த கிறுக்கன் அஷ்வின் தான் என்னை மெடிசின் படி மெடிசின் படின்னு வற்புறுத்தி படிக்க வெச்சான்!
சின்ன கிளாஸ் ல இருந்தே நானும் அஷ்வின்னும் பிரெண்ட்ஸ்.... ஒண்ணா ஸ்கூலுக்கு போனோம், ஒண்ணா competitions க்குபோனோம், ஒண்ணா சைக்கிள் வாங்கினோம், ஒண்ணா college க்குப்போனோம் - it was a fantastic childhood! - சரி அவனை பத்தி அப்புறம் சொல்றேன்!
எங்க கூட படிச்ச மத்த பிரெண்ட்ஸ் அப்பாக்களுக்கு transfer ஆயிடும். அதுனால எப்போவுமே எங்க கும்பல்ல 5 பேரு தான் fixed, மத்தவங்க எல்லாம் 3 to 5 years மெம்பர்ன்னு வெச்சிக்கொங்கோளேன்!
டாய் - என்ன பத்தி எழுதலாம்ன்னு நினைச்சு start பண்ணா - எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ முடிக்கபோறேன் போல இருக்கு!! - Get out of my head! :-)
எனக்கு கர்நாடக சங்கீதம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்! அடுத்தது ஐஸ் கிரீம்! அடுத்தது அப்பா, அம்மா and அண்ணா! நிறைய விளையாடுவேன்... Sports! ன்னா I am crazy! ஸ்கூல், காலேஜ் ல பசங்களுக்கு நடுவுல நான் மட்டும் ஒரு oddity அ நிப்பேன்!
வேற என்னபத்தி சொல்றதுக்கு ஸ்பெஷலா எதுவும் இல்ல! அஷ்வின் கிட்ட மட்டும் கேக்காதீங்க - வாய திறந்தா மூடமாட்டன்! :-)
அட!! அஷ்வின் கால் பண்றான் - என்ன சந்தேகமோ பைய்யனுக்கு....
சரி அப்புறம் பேசலாம் டாட்டா -
Good night!
மழையே....நலமில்லை.....நாங்கள்...
8 years ago
No comments:
Post a Comment